அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு சவூதிக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற்ற இரண்டாவது நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில், கலந்து கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சவூதி அரேபியாவின் போக்குவரத்து மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சர் அல்-ஜாசரை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில்,நாட்டின் அண்மைக்கால அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை அமைச்சர் விபரித்தார்.

துறைமுகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைத்த அவர், அக்டோபர் 16 ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கடல்சார் மாநாட்டில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.

சர்வதேச கடல்சார் அமைப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கடற்படையினருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்தவும் இவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

Related posts

எதிர்வரும் 20ம் திகதி – புதிய அரசின் கொள்கைப் பிரகடனம்

தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு மொட்டு கட்சி எம்பி சந்திரசேன

மேலும் 29 பேர் பூரண குணம்