சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராக பிரபல வர்த்தகர் ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டார்.
இதற்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொழில்முனைவோர் திலீப் ஜயவீர, இன்று (18 ) கட்சிக் காரியாலயத்தில் வைத்து கையளித்தார்.
இதன்போது, கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகமவும் கலந்து கொண்டிருந்தார்.
-சரவணன்