உள்நாடு

சர்வக்கட்சி மாநாட்டில் தமிழ் தேசியகட்சிகள் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் …

(UTV | கொழும்பு) –     இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணும் சர்வக்கட்சி மாநாட்டில் ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் தொடர்பில் தமிழ் தேசியகட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

நேற்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

அதன்படி, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் இதன் போது எட்டப்பட்டது.

மேலும் தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும், மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும், அதிகாரப்பரவலை வழங்க வேண்டும் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்தை வலியுறுத்துவது தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணும் சர்வக்கட்சி மாநாடு கூடவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை

கட்சி மாறுவது சமூகத்துக்கு சாபக்கேடாகவே அமையும் – ரிஷாட்டின் தீர்மானத்தையே பலப்படுத்துவேன் – முன்னாள் எம்.பி.நவவி

editor

முன்னாள் ஜனாதிபதி ரணில் சூம் தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்தார்

editor