வகைப்படுத்தப்படாத

சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்…

(UTV|COLOMBO) * நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதனால், நம் தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோல் பளபளப்புடன் அழகாக இருக்கும்.

* தோலை அழகாக்குவதில் குடைமிளகாய்க்கு முக்கிய பங்கு உண்டு. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்து உள்ளன. இதை, உணவில் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், நிறக் குறைவு மற்றும் தோல் பிளவுகள் மறையும். முக்கியமாக, இதில் கலோரி மிகக் குறைவாகவே இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கூட இதை எடுத்துக்கொள்ளலாம். குடல் புண்ணை ஆற்றும் வலிமையும் இதற்கு உண்டு.

* இயற்கையின் சிறந்த வரம் கிரீன் டீ. இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால், சூரியனில் இருந்து வரும் வெப்பத்தாக்கங்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ-யில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே, ஒரு நாளைக்கு எவ்வுளவு வேண்டுமானாலும் பருகலாம். இதில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட் தோலைப் பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகின்றன. இதய நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

* பப்பாளியை உணவாகவும் சாப்பிடலாம், அரைத்து முகத்தில் தடவினாலும் கண்டிப்பாகப் பலன் உண்டு. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தோல் பொலிவு தரும். பெண்களின் முறையான மாதவிலக்குக்கு உதவும். தோல் வெடிப்புக்கு இது சிறந்த மருந்து. ஆனால், குறிப்பிட்ட அளவுதான் உண்ண வேண்டும்.

 

 

 

Related posts

விஜயகாந்த்தின் இறுதி கிரியைகள் இன்று !

Three die in Medawachchiya motor accident

Navy apprehends 4 Indian fishers for poaching in Lankan waters [VIDEO]