உள்நாடு

சரத் பொன்சேகாவின் பதவி இடைநிறுத்ததை தடுக்கும் வகையில் தடை உத்தரவை கோரி ஆட்சேபனைகளை தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் கட்சியின் பதவிகளிலிருந்து இடைநிறுத்துவதையும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதையும் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு  கோரி ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (04)  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த ஆட்சேபனைகளை இன்று பிற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிவதன்  சந்துன் விதான உத்தரவிட்டார்.

Related posts

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு – பரீட்சை திணைக்களம்

editor

தாய் விமான சேவைகள் இரத்து

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது