உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளுக்கு பணம் செலுத்தாமல் தப்பியோடிய இளைஞன் கைது!

சம்மாந்துறையில் ஆன்லைன் ஊடாக ரூபாய் 45,000 பெறுமதியான பொருளை ஆர்டர் செய்து அதற்கான பணத்தினை வழங்காமல் தப்பியோடி இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆன்லைன் ஊடாக ஆர்டர் செய்யப்பட்ட பொருளுக்கு பணம் வழங்காமல் தப்பியோடி உள்ளார் என்று நேற்று முன்தினம் (20) புதன்கிழமை முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் மேற்பார்வையில், பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (21) வியாழக்கிழமை சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஆன்லைன் ஊடாக ஆர்டர் செய்யப்பட்டு பணம் வழங்காமல் கொண்டு சென்ற பொருளையும் சம்மாந்துறை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (22) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமருக்கிடையிலான சந்திப்பு!

மான்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி அருண பனாகொட வெளியிட்ட தகவல்

editor

இரும்புத் தாது விலைகளும் அதிகரிப்பு