சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் வடமாகாணத்திற்கு இரண்டு நாள் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தல விஜயத்தின் போது , வட மாகாணத்தில் உள்ள பிரபல தமிழ் பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, புனித ஜோன் பெஸ்கோ வித்யாலயம், கிளிநொச்சி பளை இந்து ஆரம்ப பாடசாலை ஆகியவற்றுக்கு விஜியம் செய்து அங்குள்ள கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை பார்வையிட்டனர்.
இதன் போது பாடவிதானம் மற்றும் இணைப்பாடவிதான முன்னெடுப்புக்கள், பாடசாலைகளின் உள்ளக கவின்கலை, நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிந்து கொண்டனர்.
சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ் .மகேந்திர குமார் தலைமையில் கல்விசார் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட இக் குழுவினரை வட மாகாண கல்வியலாளர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.
இதன்போது யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் செந்தில் மாறன் பாடசாலைகளில் கற்றல் ,கற்பித்தல் செயற்பாடுகள் அவற்றின் உள்ளீடுகள் பெறப்படும் வெளியீடுகள் தொடர்பாக குழுவினருக்கு முன் விரிவாக விளக்கம் அளித்ததுடன், நினைவுப் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.
அத்துடன் இந்த களப்பயணத்தின் போது பெற்றுக் கொண்ட நல்ல அனுபவங்களை சம்மாந்துறை கல்வி வலயத்தில் பிரதியீடு செய்வதன் மூலம் சிறந்த பயனை எதிர்காலத்தில் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து செயற்பட உள்ளதாக வலய கல்விப் பனிப்பாளர் பணிப்பாளர் தெரிவித்தார்.
-தில்சாத் பர்வீஸ்