அரசியல்உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சம்மாத்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் இன்று (15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், திணைக்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடமாடும் சேவையில் சுற்றுச் சூழல், கிராம மட்ட பிரச்சினைகள், தேசிய அடையாள அட்டை, அஸ்வெசும நலன்புரி திட்டம், ஆதன வரி, காணி, கட்டடம், வியாபார அனுமதிப் பத்திரம், முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதோடு, அவைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் கருப்பொருள், சமூகங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும், வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும், மேலும் எதிர்காலத்திற்கான நிலையான தொலைநோக்குப் பார்வையை முன்னெடுக்கும் ஒரு நகரத்தை உருவாக்குவதாகும், இவ்வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை (15) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) வரை இடம்பெறும்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

ஜனாதிபதி தேர்தல் எப்போது ? நாளை இரவு அறிவிப்பு.

பிரதமர் பதவியில் மாற்றம் குறித்து பசிலின் நிலைப்பாடு

சஜித் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் ஆதரவளிக்க நாம் தயார்