அரசியல்உள்நாடு

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மாஹிர் தனது கடமையைப் பொறுப்பேற்றார்!

கடந்த 26.06.2025 அன்று சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக ஏக மனதுடன் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர் உத்தியோகபூர்வமாக தனது தவிசாளர் கடமைகளைப் இன்று (30) பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் நோக்கி சிறந்த சேவைகளை வழங்க தவிசாளர் மாஹிர் அவர்களுடன் இணைந்து பயணிப்போம் எனவும், அர்பணிப்புடன் இணைந்து செயலாற்ற உறுதுணையாக நின்று, தொடர்ந்து ஒரு சிறந்த சம்மாந்துறையை உருவாக்குவோம் என சம்மாந்துறையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

Related posts

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஆடைகள் வழங்கி உதவி!

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!

இறக்காமத்தின் வரலாற்றை மாற்றியமைத்து புதிய தவிசாளராக எம்.எல்.முஸ்மி தெரிவு

editor