சம்மாந்துறை பிரதேச சபைக்கு இம்முறை தெரிவாகிய கௌரவ உறுப்பினர்களுக்கான சபை நடவடிக்கைகள் மற்றும் சபை கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான செயலமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி விளையாட்டுக்கட்டிட தொகுதி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் கெளரவ தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், ஓய்வு நிலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.றிஸ்வி, எம்.ஏ.எம்.இஸ்மாயில் ஆகியேர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
இதன்போது அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.