அரசியல்உள்நாடு

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே சினேகபூர்வ சந்திப்பு!

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோருக்கு இடையிலான சினேகபூர்வ சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, சம்மாந்துறை பிரதேசத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், உள்கட்டமைப்புகள், பொதுமக்களின் தேவைகள், மற்றும் பிரதேச சபையின் செயற்பாடுகள் குறித்தும் விபரமாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் எதிர்வரும் நாட்களில் மக்கள் நலன் கருதிய செயல்திட்டங்களை ஒருமித்த ஒத்துழைப்புடன் முன்னெடுக்க வேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் வாசித் அவர்களும் தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர்.

-சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்

Related posts

“பஸ்தீன் மக்களுக்கு நீதி கிட்டவேண்டும்” – இன்று கொழும்பில் போராட்டம் | காணொளி காட்சிகளை UTV HD, யூடிப் பக்கம் மூலம் பார்வையிட முடியும்

editor

ஆயுதமேந்திய குழுவொன்று பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

editor

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்