நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள் வளவு வாழைத்தோட்டங்கள் மட்டுமன்றி சில வீடுகளின் சுவர்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.
மேலும் அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன் அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-பாறுக் ஷிஹான்