உள்நாடு

சம்பிக்கவுக்கு எதிரான ராஜகிரிய விபத்தின் வழக்கு விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – ராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய துஷிதகுமார் மற்றும் வெலிக்கடை காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொள்கையே இல்லாமல் அரசியல் நடத்துவது கோமாளித்தனமாகும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்