வகைப்படுத்தப்படாத

சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி அந்த திணைக்களம் வாக்குமூலம் பெற்றதின் பின்னர் அவர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ, நீர்கொழும்பு பொலிஸ் விசாரணை குழுவில் நேற்று(02) சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் அவர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

පුජීත් ජයසුන්දරවත් රෝහල් ගත කෙරෙයි

Momoa leads Netflix’s “Sweet Girl” film

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை விஜயம்