உள்நாடுசூடான செய்திகள் 1

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று, தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,700 ரூபாய் சம்பளம் குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியிலுள்ள முன்மொழிவுகளுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய எதிர்வரும் 15ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சில ஊடகங்கள் அறிக்கையிடுவது தவறானதாகும் என்றும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதற்கான திகதி அல்லது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக அரச அதிகாரிகளின் அறிக்கைகளும், ஊடகங்கள் அதை தவறாகக் கையாளும் விதமும் சம்பள அதிகரிப்பு தொடர்பாக, தொழிலாளர்கள் மத்தியில் தேவையற்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் சம்மேளனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Related posts

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

உயர்தரப்பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு விடுதலை