உள்நாடு

சம்பள உயர்வு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை –  ரமேஷ் பத்திரண

(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிப்படும் என கூறப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் நாளாந்த சம்பள உயர்வு தொடர்பில் மார்ச் மாத முதல் வாரத்தில் தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சம்பள உயர்வு தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹிருணிகாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் FIASTA 25 விருது வழங்கும் நிகழ்வு!

editor

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ