அரசியல்

சம்பந்தனுடைய வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருக்கின்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 02.07.2024 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் கூடுகின்ற பாராளுமன்ற அமர்வின்போது அவர் சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் மேற்கொள்ளவுள்ளார்.

Related posts

மருந்தாளுநர்களின் பற்றாக்குறையை நிரப்பாமல் மருந்தகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சஜித்

editor

VAT வரி சட்டமூலத்தில் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர நியமனம்

editor