உள்நாடு

சம்பத் மனம்பேரியை 7 நாள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரி நேற்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சம்பத் மனம்பேரி பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம்
வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான, சம்பத் மனம்பேரியை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நீதிமன்றம் இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

Related posts

காதலர் தினத்தைக் கொண்டாட மறுத்த காதலி – மனமுடைந்த இளைஞன் தற்கொலை

editor

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்