உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாண நவராத்திரி விழா!

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சப்ரகமுவ மாகாண நவராத்திரி விழா நேற்றையதினம் (03) பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் குருவிட்ட கீரகல தமிழ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி நவராத்திரி விழாவை முன்னிட்டு பாடசாலையில் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் குருவிட்ட பிரதேச சபை தலைவர் விகசித புஷ்பகுமார, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆரச்சி, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் நெவில் குமாரகே, குருவிட்ட பிரதேச செயலாளர் பாங்கிய படுகெதர, குருவிட்ட கீரகல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் ஜே. டேமியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன் – ஜனாதிபதி ரணில்

editor

சதொச ஊடாக நியாயமான விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க கலந்துரையாடல்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor