உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி உயிரிழப்பு

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.

கிரிந்திவெல, கன்னிமஹர பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய கணவரும் 79 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இன்னும் சில மணி நேரம்