வணிகம்

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

(UDHAYAM, COLOMBO) – திறந்த சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் வுஆமுடீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சீனியின் விலை குறைந்து வருகின்றது. முன்னர் ஒரு கிலோ சீனிக்காக 30 ரூபா வரி அறிவிடப்பட்டது. அந்த வரியை 25 சதம் வரை குறைத்து சமீபத்தில் பத்து ரூபா வரை அதிகரிக்க நேர்ந்தது.

சதொச கிளைகள் மூலம் ஒரு கிலோ சீனி 102 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் ஒரு கிலோ சீனிக்காக அறவிடப்படும் வரி 26 ரூபாவாகும். இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளுர் உற்பத்திகளுக்கு சாதகமான நிலையே ஏற்பட்டுள்ளதென்று திரு.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்

COVID-19 சவால்களை சமாளிப்பதற்கு NTB ‘விசேட வைப்புக் கணக்கு’ அறிமுகம்