உள்நாடு

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட ஜீப் சிக்கியது – ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ஒன்றுடன் ஒருவரை ஜெயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் முல்லேரியா பொலிஸ் பிரிவின் ஹிம்புட்டான பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜீப்பை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் ஹிம்புட்டானைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர்.

சம்பவம் குறித்து முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

editor

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு