உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு – ஒருவர் கைது

அநுராதபுரம், மரதன்கடவல பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கவைத்து காட்டுயானை ஒன்றினை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மரதன்கடவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (21) மரதன்கடவல பொலிஸ் பிரிவின் பெரியகுளம இட்டிகட்டிய பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரான பெரியகுளம், இட்டிகட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 43 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

25 வயதுடயதாக மதிக்கப்படும் 9 அடி உயரமான காட்டுயானை ஒன்றே இவ்வாறு சட்டவிரோத மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸாரும் அநுராதபுரம் திறப்பனை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளும் தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-ஏ. பிர்தெளஸ்

Related posts

கண்டி மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்தது – கரையோரங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

editor

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17 ஆம் திகதி

editor

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்ய ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

editor