உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத மதுபானம் தயாரித்த ஒருவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழு, குறித்த வனப்பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, அந்த நபர் கைதாகியுள்ளார்.

இதன் போது, 210 லீட்டர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் அழிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரால் தயாரிக்கப்பட்ட 1500 மில்லிலீட்டர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபர் 69 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மான் இறைச்சியை கடத்திச் சென்ற இருவர் கைது

editor

புறக்கோட்டை பகுதியில் மீண்டும் தீ விபத்து

editor

இலங்கை பைடனுடன் இணைந்து பணியாற்ற தயார்