சூடான செய்திகள் 1

சட்ட விரோத வெடிபொருள் நிலையம் சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) நிக்கவெரட்டிய, கோனகஸ்வெவ பகுதியில் சட்ட விரோத வெடிபொருள் நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீகலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிபொருள் நிலையத்தில் இருந்து கல்கடஸ் வகையான துப்பாக்கி ஒன்று, பாதி நிர்மாணிக்கப்பட்டிருந்த போர 12 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் வெடிபொருள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

புகையிரத கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா தற்காலிகமாக நீக்கம்

8 அங்குலம் நீளமான விமான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு