உள்நாடு

சட்ட மா அதிபர் விவகாரம் – சட்டத்தரணிகள் சங்கம் கவலை

சட்டமா அதிபரை குறிவைத்து சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தச் சமூக ஊடகப் பதிவுகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிட தனிநபர்களின் முயற்சி என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது.

குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சட்டமா அதிபர் ஒரு அரை-நீதித்துறைப் பாத்திரத்தை வகிக்கிறார் என்றும் அந்தச் சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

விசாரணை அதிகாரிகள் முன்வைக்கும் உண்மைகளின் அடிப்படையில் ஒரு சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் அல்லது குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதா இல்லையா என்பதை சட்டமா அதிபர் தீர்மானிக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.

தொடர்புடைய உண்மைகள் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதாரங்களா என்பதையும், அந்த உண்மைகளின் அடிப்படையில் தண்டனை வழங்குவதற்கான நியாயமான நிகழ்தகவு உள்ளதா என்பதையும் சட்ட மா அதிபர் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.

மேலும், சட்டமா அதிபரின் முடிவுகளை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் ஒரு சான்றளிப்பு மனு அல்லது உயர் நீதிமன்றத்தின் முன் ஓர் அடிப்படை உரிமைகள் மனு மூலம் மறுஆய்வு செய்யலாம் என்றும் அது கூறுகிறது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை