உள்நாடுவணிகம்

சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை

(UTV | கொழும்பு) – மரக்கறிகளின் விலைகள் சந்தையில் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கிலோகிராம் போஞ்சி 500 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கரட் 320 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பீட்ரூட், கோவா, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் என்பன 240 ரூபாய்க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர கறிமிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 600 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 170 ரூபாயாக உயர்வடைநதுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 25 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 4 இலட்சமாகக் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சீரற்ற வானிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

புகையிரதத்தில் மோதுண்ட நபர் ஸ்தலத்தில் பலி!

அரச வெசாக் விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்

editor