உள்நாடு

சஜித் – மைத்திரி இடையே விசேட சந்திப்பு

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட சில விசேட அரசியல் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இன்றும் 261 பேர் நாடு திரும்பினர்

சொய்சபுர தாக்குதல் சம்பவம்; பிரதான சந்தேக நபர் உயிரிழப்பு

ஹொரணவில் அதி பாதுகாப்பு சிறைச்சாலை