உள்நாடு

சஜித் பிரேமதாச தம்பதியினர் கங்காராம விகாரைக்கு

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோர் குணமடைந்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர்கள் வீடு திரும்பினர்.

இவர்கள் கடந்த மே 23 ஆம் திகதியன்று கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இருவரும் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் கொழும்பில் உள்ள ஹுனுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் அவரது பாரியாரும் திரித்துவத்தின் ஆசீர்வாதங்களைப் பெறும் பொருட்டு கங்காராம விகாரைக்கு சமூகமளித்தனர்.

பேராசிரியர் சங்கைக்குரிய அகலகட சிறிசுமன தேரர், சங்கைக்குரிய நீதியாவெல பாலித தேரர், சங்கைக்குரிய உங்கொட தம்மிந்தா தேரர்,கங்காராமை விகாரையின் சங்கைக்குரிய அஸ்ஸஜி தேரர் ஆகியோர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்களால் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கும், சகல நாட்டு மக்களுக்காகவும் ஆசிர்வாதங்களை வழங்கியதோடு பிரித் அனுஷ்டானங்களையும் நிகழ்த்தினர்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் தனது எதிர்கால முயற்சிகளுக்காக தமது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் இதன் போது மகா சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related posts

ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம் – பிரதமர் ஹரிணி

editor

அரசாங்கத்துக்குள் மீண்டும் வரும் ராஜபக்சர்கள் நாட்டில் நடக்கப்போவது என்ன?

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

editor