அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கூட்டணி – பீரிஸ் தலைமையில் 12 கட்சித்தலைவர்கள் பேச்சு – ஹக்கீம், ரிஷாட், மனோ பங்கேற்பு

சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கூட்டணியாக செயற்படுவது குறித்து முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் 12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசியல் கூட்டணியின் தலைமைத்துவம் குறித்து அவதானம் செலுத்தப்படாத நிலையில் கூட்டு பொறுப்புடன் செயற்பட்டு மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வெகுவிரைவில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸின் கொழும்பில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு 12 அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்சிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பதிரன, செஹான் சேமசிங்க, லசந்த அழகியவன்ன, மயந்த திஸாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா,சுசில் பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் வகிபாகம், அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 20 சதவீத பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை முடக்கும் வகையில் தான்தோன்றித்தனமாக அரசாங்கம் செயற்படுகிறது.

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதியில் சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கூட்டணியாக செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கூட்டணியின் தலைமைத்துவம் குறித்து அவதானம் செலுத்தப்படாத நிலையில் கூட்டு பொறுப்புடன் செயற்பட்டு மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வெகுவிரைவில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

-இராஜதுரை ஹஷான்

Related posts

புதிய பிரதமருடன் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய மேலும் 16 பேருக்கு தொற்று

‘மானிட சுபீட்சத்திற்கு வழி வகுக்கும் நாளாக ரமழான் பெருநாள் அமையட்டும்’