உள்நாடு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்களில் 1,100 ரூபா, 1,200 என பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட விலையில் தற்போது கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதில்லை.

எனவே, கோழி இறைச்சிக்கு உரிய விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதுடன், விலையையும் குறைக்குமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த விலை உயர்வு குறித்து இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகரவிடம் விசாரித்த போது, வார இறுதியில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

அரச அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்

ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக எவ்வித மாற்றத்திற்கும் உட்படவில்லை – பிரதமர் ஹரிணி

editor