அரசியல்உள்நாடுபிராந்தியம்

கோறளை மத்தியில் திண்மக்கழிவுகளை அகற்ற விசேட நடவடிக்கை – தவிசாளர் எஸ். சுதாகரன்

கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, செம்மண்ணோடை, மாவடிச்சேனை, பிறைந்துரைச்சேனை ஆகிய பகுதிகளில் குவியும் திண்மக்கழிவுகளை தொடராக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் திண்மக்கழிவுகளை அகற்ற ஒரேயொரு உழவு இயந்திரம் சேவையில் ஈடுபட்டு வந்தது. இதனால் குறித்த பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இதனை கருத்திற் கொண்டு குறித்த பகுதிகளில் சேரும் திண்மக்கழிவுகளை அகற்ற தினந்தோறும் நான்கு உழவு இயந்திரங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இது

பவி தீவிர சிகிச்சைப் பிரிவில்

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்