உள்நாடு

(UPDATE) கோப் குழுவில் இருந்து தயாசிரி, இரான், மரிக்கார் இராஜினாமா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்திருந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரும் தனது கோப் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் இருந்து (கோப்) இராஜிநாமா செய்ய தீர்மானித்துள்ளார். அதன்படி தனது இராஜிநாமா கடிதத்தை சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப வேண்டும் – யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர இந்தியாவுக்கு விஜயம்

editor

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி