உள்நாடுவணிகம்

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்

(UTV | கொழும்பு) –   சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் டொலர் பிரச்சினை காரணமாக இலங்கையின் மொத்த கோதுமை மா தேவையில் 25% மாத்திரமே விடுவிக்கின்றன என குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலை தொடருமானால், வரிசையில் நின்று பாண் ஒன்றினை கூட பெற முடியாத நிலை ஏற்படும் எனவும், வாடிக்கையாளர்கள் 250 ரூபா தொடக்கம் 300 ரூபா வரையிலான விலையில் ஒரு பாணை வாங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் – இருவர் படுகாயம்

editor

வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி