(UTVNEWS | COLOMBO) – மருத்துவ பரிசோதனைக்காக எதிர்வரும் 09ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் சிங்கப்பூர் பயணிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையில், அவரது கடவுச்சீட்டினை விடுவிக்க விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கொண்ட விசேட நீதாய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.