உள்நாடு

#கோட்டாகோகம தாக்குதல் : முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மொரட்டுவை மாநகர சபை ஊழியரும் கைது

(UTV | கொழும்பு) – #கோட்டாகோகம மற்றும் #மைனாகோகம மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவ மாநகர சபை ஊழியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, மே 9ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 159 பேர் நேற்று (மே15) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், முன்னதாக 398 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts

AstraZeneca போதுமானளவு கையிருப்பில் உள்ளது

காலியில் புகையிரதம் ஒன்று தடம்புரள்வு

அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !