உள்நாடு

கொவிட் தொற்றினால் 98 இலங்கையர்கள் மரணம்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிந்த 98 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி. சவுதி அரேபியாவில் 35 பேரும், குவைட்டில் 21 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், பிரித்தானியாவில் 5 பேரும், உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்துடன், அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளன. பஹரேன் ஜோர்தான், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா இரண்டு இலங்கையர்களும் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்ச மேலும் கூறுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி

மக்களிடம் பலவந்தமாக பணம் வசூலித்த 11 பேர் கைது!

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்