உலகம்

கொவிட்-19 : சிங்கப்பூரில் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த நிலையை கையாள முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 80 சதவீதமானோருக்கு சிறிய நோய் அறிகுறிகளே தென்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவில் வெள்ளம் – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

காசாவில் மருத்துவ பணியாளர்கள் சுட்டுக்கொலை – ஏற்றுக்கொண்டது இஸ்ரேல்

editor

சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா? – உக்ரைன் ஜனாதிபதி