கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அம்மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.
டிசெம்பர் 22ஆம் திகதி சபை வாக்கெடுப்பில் இந்த வரவு, செலவுத்திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வாசிப்புக்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வரவு, செலவுத்திட்டமானது மாநகர சபையின் செயற்றிறனையும் எதிர்வரும் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களையும் பிரதிபலிப்பதாகவும் கொழும்பு மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தையும் வளமான நகரையும் உருவாக்குவதே தமது இலக்காகத் தொடருமெனவும் அவர் குறிப்பிட்டார்.
2023/24 காலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை இல்லாமல் ஆணையாளர் முறையில் நிர்வாகம் நடந்ததால் வரவு, செலவுத்திட்ட தயாரிப்பு சிக்கலானதாக இருந்ததாகத் தெரிவித்த அவர், முன்னதாக புதிய சபை நியமிக்கப்பட்டு சில வாரங்களுக்குள் திட்டத் தயாரிப்பு தொடங்கப்பட்டு ஜூலை மாதத்தில் 16 மாநகர நிறுவனங்களிடமும் ஆளும் தரப்புஅவை அரசியல் பேதமின்றி அவை பொதுநலன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது.
முதன்முறையாக மாநகர ஊழியர்களிடமிருந்தும் எழுத்து மூலமான முன்மொழிவுகள் பெறப்பட்டன.
நிதிச் சாத்தியக்கூறுகள் மற்றும் செலவுத் தேவைகள் குறித்து நவம்பர்வரை கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
பின்னர் 23 நிலைக் குழுக்கள், நிதிக் குழுக்கள் ஆகியவற்றின் பரிசீலனையுடன் சட்டப்படி பொதுமக்கள் பார்வைக்காகவும் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டது.
