உள்நாடு

கொழும்பு மாநகர சபைக்குள் பொதி செய்யப்பட்ட ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் – ஒருவர் கைது

கொழும்பு மாநகர சபையில் உள்ள தனது அலுவலக அறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்து அதனை அங்குள்ள ஊழியர்களுக்கு விற்பனை செய்த்தாகக் கூறப்படும் மாநகர சபை சாரதி உதவியாளர் ஒருவர் நேற்று முன்தினம் (22) 20,860 மில்லிகிராம் ஐஸுடன் கைது செய்யப்பட்டதாக வலான ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் மாநகர சபை துணைப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வலான ஊழல் தடுப்பு பிரிவு சந்தேக நபரைக் கைது செய்தது.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கொழும்பு மாநகர சபையின் மாவட்ட அலுவலகம் 03 இல் சாரதி உதவியாளராகப் பணியாற்றி வருவது தெரிய வந்தது.

Related posts

அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியின் கூடிய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor