உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவ பரிந்துரைகளின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீடியோ

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச நிறுவனமொன்றுக்கு திடீர் விஜயம்

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”

தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்