சூடான செய்திகள் 1

கொழும்பு-ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு-ஜம்பட்டா வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று(08) இரவு 7.50 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த 24 வயதுடைய சூரியகாந்த் என்ற இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இடியுடன் கூடிய மழை

முஸ்லிம் திருமண, விவாகரத்து யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!