உள்நாடு

கொழும்பு, புறக்கோட்டையில் கடையொன்றில் தீ விபத்து!

கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சைனா தெரு சந்திக்கு அருகிலுள்ள கடையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (14) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தின் போது ஏற்பட்ட புகையால் சுவாசிக்க சிரமப்பட்டு ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சொத்துக்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

இதன்போது, யாருக்கும் காயமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது

கலாசார நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம், ஒழுக்கமான குடிமகனை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அநுர

editor

வாழைச்சேனையில் ஹெரொயினுடன் இளைஞன் கைது.

editor