உள்நாடு

கொழும்பில் கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரத்தினுள் இராணுவ துரித முன்னேற்ற குழுவினர், பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு செயல்பாட்டு நடவடிக்கை மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதி கூடிய வெப்பநிலையுடைய நபர்கள் இணங்காணப்பட்டு அவர்களின் நோய்த்தொற்று நிலையை அறிவதற்காக மருத்துவமனைக்கு உடனடியாக கண்டறியும் வகையில் உட்புகுத்தபடுவர் என தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் இராணுவ நடவடிக்கை பணியகத்தின் தலைமையில் கொழும்பு பிரதேசங்களில் விஷேட தேவை நிமித்தம் வீதிகளில் பயணிக்கும் நபர்களை பரிசோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Related posts

துமிந்த சில்வாவிற்கு எந்த காரணத்திற்காகவும் பொது மன்னிப்பை வழங்கப்போவதில்லை – பிரதி நீதியமைச்சர் மகிந்த ஜயசிங்க

editor

வீடுக்கு வாடகை செலுத்தாத கெஹலிய: சம்பளத்திலிருந்து பெற பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம்

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்