உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 34 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 36 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேரும், கண்டி மாவட்டத்தில் 13 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், குருநாகல் மாவட்டத்தில 11 பேரும் , மாத்தளை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி,மட்டக்களப்பு, பதுளை, பொலன்னாறுவை மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

டெல்டா மாறுபாட்டின் மூன்று புதிய பிறழ்வுகள் இலங்கையில்

உதவிய அனைவருக்கும் நன்றி – ரிஷாதின் திறந்த மடல்

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்