உள்நாடு

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

கொழும்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதிராஜா மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இளைஞனுக்கும் அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அயல் வீட்டில் வசிக்கும் நபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

போதைப்பொருள் வர்த்தகம் -13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது