உள்நாடு

கொழும்பில் 9 மணிநேரம் நீர்வெட்டு – வெளியான அறிவிப்பு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் – செந்தில் தொண்டமான்

editor

கொழும்பு மாநகர சபையை ஆளும் தரப்பு கைப்பற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம் – சாகர காரியவசம்

editor

மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளின் போது நானே நின்றேன் – இரா.சாணக்கியன்

editor