உள்நாடு

கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல் – நால்வர் மாயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை கப்பல்கள், தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

12.5 மீற்றர் இழுவை கொண்ட 270 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பல் ஜூன் 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Related posts

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகத்தை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ரணில்

editor

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor