வணிகம்

கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வாரத்திற்கு 04 நாட்கள் விசாகபட்டினம் வரை நேரடி விமான சேவையை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வருத் ஜூலை மாதம் 08ம் திகதி முதல் குறித்த இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதன்படி ஒவ்வொரு செவ்வாய், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா அலை, கடன் பெற்றோருக்கு சலுகை

“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

காலநிலை மாற்றத்திற்கு Jeff Bezos இடமிருந்து நிதியுதவி