உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நாளை(18) நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை(18) காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் கொழும்பு 13,14 மற்றும் 15 அகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 11,12 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் வழங்கும் குழாயின் திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

ரிஷாதின் கைது தொடர்பில் லக்ஷமன் கிரியெல்ல கேள்வி

பிரதமருடன் GMOA இன்று கலந்துரையாடல்

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி